கசிப்பை ஒழித்துவைக்க வீட்டிற்குள் சுரங்கம் வெட்டிய கில்லாடி!! -ஊரொழுவில் வசமாக சிக்கினார்- - Yarl Thinakkural

கசிப்பை ஒழித்துவைக்க வீட்டிற்குள் சுரங்கம் வெட்டிய கில்லாடி!! -ஊரொழுவில் வசமாக சிக்கினார்-

யாழ்.ஊரொழுப் பகுதியில் உள்ள வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காய்ச்சி மறைத்து வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் கசிப்பு காய்ச்சப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலை கொண்டு தேடுதல் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்தனர்.

இதன் போது குறித்த பகுதியில் இருந்த வீடொன்றிற்குள் சுரங்கம் வெட்டப்பட்டு அதற்குள் கசிப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சுரங்கத்திலிருந்து 12 போத்தல் கசிப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post