புலிகள் மீதான சுமந்திரனின் கருத்து!! -தமிழரசு கட்சி மத்திய குழு உரிய முடிவெடுக்கும்- - Yarl Thinakkural

புலிகள் மீதான சுமந்திரனின் கருத்து!! -தமிழரசு கட்சி மத்திய குழு உரிய முடிவெடுக்கும்-

எல்லா விமர்சனங்கள் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள தமிழ் Nதுசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுமந்திரனின் கருத்து தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும் என்றும் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார். 

அவர் இங்கு மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது;

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் எமக்கு மிக முக்கியமானது. இந்தநிலையில், தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் எதிர்பார்த்திருக்கின்றேன். இன்று பெரும்பாலும் தீர்ப்பு வரக்கூடும். 

எனினும், தேர்தலை நாம் எந்தவேளையிலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இம்முறை காத்திரமான தேர்தல் அறிக்கையை நாம் தயாரிக்க வேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அண்மையில் நாம் நடத்திய சந்திப்பின் போது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் வாக்குறுதிகளை அவர் வழங்கியிருந்தார். 

ஆனால், அந்த வாக்குறுதிகள் அப்பிடியே இருக்கின்றன. இது தொடர்பில் இன்று நாம் கலந்து பேசி ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்” என்றார்.
Previous Post Next Post