மோட்டார் போக்குவரத்து துறை புதன்கிழமை முதல் செயற்படும்!! - Yarl Thinakkural

மோட்டார் போக்குவரத்து துறை புதன்கிழமை முதல் செயற்படும்!!

எதிர்வரும் புதன்கிழமை முதல் மோட்டார் போக்குவரத்து துறையின் அனைத்து செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அரச மற்றும் தனியார் துறைகளின் அத்தியாவசியமற்ற செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தற்போது நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு, வழமையான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அரச திணைக்களத்தின் செயற்பாடுகளும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் புதன்கிழமை முதல் மோட்டார் போக்குவரத்து துறையின் அனைத்து செயற்பாடுகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post