கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பொதி!! பாபாஜி யோக சங்கம், இணையும் கரங்கள் அமைப்பு சேர்ந்து வழங்கியது- - Yarl Thinakkural

கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பொதி!! பாபாஜி யோக சங்கம், இணையும் கரங்கள் அமைப்பு சேர்ந்து வழங்கியது-

யாழ் பாபாஜி யோக சங்கம் மற்றும் இணையும் கரங்கள் அமைப்பு இணைந்து 6 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்காக சத்துணவு பொதிகள் வழங்கும் திட்டம் இன்று இலங்கை வேந்தன் கலை கல்லூரியில் ஆரம்பமானது.

இதில் முதல் கட்டமாக ஜெ.101, ஜெ.100, ஜெ.97, ஜெ.98, ஜெ.99, ஜெ.88 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கே 2000 ரூபா பெறுமதி கொண்ட மேற்படி சத்துணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் எழுந்துள்ள இடர்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எவ்வாறான சுகாதார முறைகளை பின்னப்ற வேண்டும் என்றும், வைரஸ் தொற்றில் இருந்து எவ்வாறு விலகி இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அங்கு வந்த கர்ப்பிணி பெண்களுக்கு யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளியால் சுகாதார விழிப்புணர்வுகளும் கொடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post