முள்ளிவாய்க்காலில் பொலிஸ் மூர்க்கத்தனம்!! -மக்கள் மீது தாக்குதல்: மூவர் வைத்திய சாலையில்- - Yarl Thinakkural

முள்ளிவாய்க்காலில் பொலிஸ் மூர்க்கத்தனம்!! -மக்கள் மீது தாக்குதல்: மூவர் வைத்திய சாலையில்-

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள  முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்கள் மீது பொலிஸார் மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிலர், ஒரு நபருடைய பெயரைக் கேட்டு அவர் எங்கே என்றும் அவரைக் கொண்டு வந்து உடனடியாக ஒப்படைக்குமாறு கோரியே 3 நபர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர்கள் 1990 நோயாளர் காவு வண்டி மூலமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரணம் இன்றி இரவு வேளையில் வீடுகளுக்குள் புகுந்து இவ்வாறான தாக்குதல் நடத்துவதன் பின்னணியில், குறித்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதுடன் குறித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post