குடத்தனையில் பொலிஸாரால் தாக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவ வழங்க தயார்!! வி.மணிவண்ணன்- - Yarl Thinakkural

குடத்தனையில் பொலிஸாரால் தாக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவ வழங்க தயார்!! வி.மணிவண்ணன்-

குடத்தனை பகுதியில் பொது மக்கள் மீது பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

குடத்தனை பகுதியில் பொது மக்கள் மீது கண் மூடித்தனமாக பொலீசார் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

கடும் குற்றவாளிகளை கூட தாக்குவதற்கு பொலீசாருக்கு அனுமதியோ அதிகாரமோ கிடையாது. 

அப்படி இருக்கையில் ஊரடங்கு வேளையில் பொலீசார் வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடாத்தியமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத காட்டு மிராண்டித்தனமான செயல். இந்த செயலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான சட்ட உதவியை வழங்க தயாராக உள்ளேன். இச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலீசார் மீது பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
Previous Post Next Post