நாட்டில் நேற்றும் 41 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றுக் குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,182 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றுப் புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் குவைத்திலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 21 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 695 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 477 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே மேலும் 79 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.