பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை!! -கல்வி அமைச்சர் தகவல்- - Yarl Thinakkural

பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை!! -கல்வி அமைச்சர் தகவல்-

கொரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நாட்டில் கொரோனா தொற்று நோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post