கொரோனா வைரஸை உருவாக்கிய சீன பெண்!! -அதிர்ச்சி தகவல் வெளியானது- - Yarl Thinakkural

கொரோனா வைரஸை உருவாக்கிய சீன பெண்!! -அதிர்ச்சி தகவல் வெளியானது-

வெளவால்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஷி ஷெங்கிலி மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. வெளவால்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருக்கலாமென மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் வூஹான் வைரலாஜி ஆராய்ச்சி மையத்தின், மூத்த பெண் ஆராய்ச்சியாளரும், வெளவால் பெண்மணி என அழைக்கப்படுபவருமான, ஷி ஷெங்கிலி மீது உலகின் கவனம் திரும்பியுள்ளது.

18வருடங்களாக கொரோனா குடும்ப வைரஸ் குறித்தும் வெளவால்கள் குறித்தும் இவர் ஆராய்ச்சி செய்து வருகிறார். கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்கா கூறும், வூஹான் ஆராய்ச்சி மையத்தின் 'பி4' சோதனை கூடத்தில் தான் ஷி ஷெங்கிலி இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

'ஷி ஷெங்கிலி தனது ஆய்வு மூலம் கொரோனா வைரஸை உருவாக்கியிருக்கிறார். அந்த வைரஸ் சோதனை கூடத்தில் இருந்து கசிந்து இருக்கலாம். இதனால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஆதரவான ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Previous Post Next Post