இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச அமைப்புக்களின் இருந்து வெளியேறுவோம்!! -கோத்தபாய அதிரடி- - Yarl Thinakkural

இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச அமைப்புக்களின் இருந்து வெளியேறுவோம்!! -கோத்தபாய அதிரடி-

நாட்டின் படையினர் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் அமைப்புக்கள் எதுவாக இருந்தாலும் அதில் இருந்து இலங்கை வெளியேறும் என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

உலகின் பலம்வாய்ந்த தேசங்களின் தலைவர்கள் தங்களின் யுத்தவீரர்களிற்கு எதிராக எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக எங்கள் யுத்தவீரர்கள் பெரும் தியாகத்தை புரிந்துள்ள இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் எந்த வெளிநாட்டு அமைப்பும் படையினருக்கு அழுத்தங்களை கொடுப்பதற்கும் துன்புறுத்துவதற்கும் நான் அனுமதிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகநாடுகளோ அல்லது சர்வதேச அமைப்போ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இலங்கையின் யுத்தவீரர்களை இலக்குவைத்தால் நாங்கள் இலங்கையை அவ்வாறான அமைப்புகள் ஸ்தாபனங்களில் இருந்து விலக்கிக்கொள்ள தயங்கமாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post