கோத்தாவின் அழைப்பை நிராகரித்த பொன்சேகா!! - Yarl Thinakkural

கோத்தாவின் அழைப்பை நிராகரித்த பொன்சேகா!!

தேசிய யுத்தவீரர்கள் நிகழ்வில் பங்கு கொள்ள வருமாறு முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்தார் எனினும் சரத்பொன்சேகா அதனை நிராகரித்தார் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

சரத்பொன்சேகா ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஏனைய யுத்தவெற்றி தளபதிகளுடன் முன் ஆசனத்தில் அமரும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மேஜர் ஜெனரல் குணரட்ண தொலைபேசியில் தொடர்புகொண்டு சரத்பொன்சேகாவை அழைத்துள்ளார்.

எனினும் முன்னரே தீர்மானிக்கப்பட் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவேண்டியிருப்பதால் தன்னால் கலந்துகொள்ள முடியாது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த சவேந்திரசில்வா சரத்பொன்சேகா பங்களிப்பை பாராட்டியுள்ளார்.

Previous Post Next Post