சில பாடசாலைகளை உடனடியாக ஆரம்பிக்க முடிவு!! - Yarl Thinakkural

சில பாடசாலைகளை உடனடியாக ஆரம்பிக்க முடிவு!!

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் தொடர்பிலான சுற்றுநிரூபம் ஒன்றினை கல்வியமைச்சின் செயலாளர் இன்று திங்கட்கிழமை வெளியிடவுள்ளார்.

பாடசாலைகளை மீளதிறக்கும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய சுற்றுநிரூபமே வெளியாகவுள்ளது.

மாகாண கல்விப்பணிப்பாளர்கள் அதிபர்கள் சுகாதார அதிகாரிகள் உட்பட பலரிற்கு இந்த சுற்றுநிரூபத்தினை கல்வியமைச்சு அனுப்பிவைக்கவுள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள கையேட்டின் அடிப்படையில் இதனை தயாரித்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் என்எச்எம் சித்திரானந்த தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பாடசாலைகளை ஆரம்பித்த பின்னர் நிலையை அவதானித்து ஏனைய பாடசாரலைகளை ஆரம்பிக்கவேண்டும் என பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பித்த பின்னர் எதிர்நோக்ககூடிய நெருக்கடிகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சுற்றுநிரூபத்தில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள், பாடசாலைகளில் மாணவர்கள் நீர்அருந்துவதற்காக பயன்படுத்தும்வளங்கள் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் வகுப்பறையொன்றில் குறிப்பட்ட அளவிலான மாணவர்களிற்கே கற்பித்தலை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சுற்றுநிரூபத்தில் இடம்பெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post