மருத்துவ பீட கொரோனா பரிசோதணை நிறுத்தம்!! -தம்பதிகளான விரிவுரையாளர்களே காரணம்- - Yarl Thinakkural

மருத்துவ பீட கொரோனா பரிசோதணை நிறுத்தம்!! -தம்பதிகளான விரிவுரையாளர்களே காரணம்-

யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்புகூட பரிசோதணை நடந்த இரண்டு நாட்களான நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதணை தொடர்பில் அப்பீடத்தில் உள்ள கணவர் மற்றும் மனைவியாகிய விரிவுரையாளர்கள் இருவருடைய விசம பிரச்சாரத்தை அடுத்தே அப் பரிசோதணை நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனைகள் இடம்பெற்றுவந்த நிலையில், குறித்த பரிசோதனை நடவடிக்கைள் தொடர்பாக பெண் விரிவுரையாளரும் அவருடைய கணவரும் பல்கலைகழகத்திற்குள்ளும், சமூக மட்டத்திலும் விசமனத்தனமான பிரச்சா ரங்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.

இதனால் எழுந்துள்ள குழப்பமான நிலையை கருத்தில் கொண்டு இரு நாட்களுக்கு கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக யாழ்.பல்கலைகழக மருத்துவபீட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post