பூசகரை மாற்றியதால் குழப்பம்!! -சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தில் சம்பவம்- - Yarl Thinakkural

பூசகரை மாற்றியதால் குழப்பம்!! -சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தில் சம்பவம்-

யாழ்.சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தில் பூசை செய்துவந்த பூசகரை மாற்றியதால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்திற்கு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் ஆலய நிர்வாகம் இயங்கவில்லை ஆலயத்திற்கு ஒரு சிலர் தனிப்பட்ட நபர்கள்  உரிமை கோரி வருகின்றனர்.

இதன் காரணமாக ஆலயம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் 11 வருடங்களாக நிர்வாகம் இயங்கவில்லை.

இருந்த போதிலும் அதன் உரிமையாளர் என சொல்லப்படும் ஒரு சிலர் மட்டும்தான் அதன் நிதி வளங்களையும் பூசை போன்றவற்றை தொடர்ந்து கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் பல வருடங்களாக அங்கு பூஜை செய்து வரும் குருக்கள் திடீரென நிறுத்தப்பட்டு வேறு ஒரு அர்ச்சகர் ஆலயத்தில் காலை பூசை வழிபாடுகளை மேற்கொள்ள முற்பட்டதை தொடர்ந்து அங்கு கூடிய கிராம மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இன்று காலை பதற்றம் நிலவியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கொரோனா காலத்தில் ஆலயத்தில் இவ்வாறு ஒன்றுகூட முடியாது என கூறி உடனடியாக அனைவரையும் வெளியேற்றினர்.  சம்பவத்துடன் தொடர்பு கொண்டவர்களை விசாரணைக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post