அம்பன் சூறாவளி காங்சேன்துறை உள்ளிட்ட வடக்கை தாக்கும்!! - Yarl Thinakkural

அம்பன் சூறாவளி காங்சேன்துறை உள்ளிட்ட வடக்கை தாக்கும்!!

அம்பன் சூறாவளியின் தாக்கம் காங்கேசன்துறை உட்பட மன்னார் மாவட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த சூறாவளியின் தாக்கம் நாளையுடன் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அம்பன் சூறாவளி வடகிழக்காக நாட்டை விட்டு நகர்ந்து செல்வதுடன், இன்று பிற்பகல் பங்களாதேஸ்ன் மேற்கு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரில் இருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை மற்றும் காலியில் இருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிக வேகத்தில் வீசக்கூடும்.

குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post Next Post