வடகொரியா- தென்கொரியா மோதல் - Yarl Thinakkural

வடகொரியா- தென்கொரியா மோதல்


வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் 20நாட்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையிலான நட்புணர்வு பெரும்பாலும் நன்றாக இருந்ததில்லை. ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையில்மிகப்பெரியளவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதில்லை. இரு நாட்டு ஜனாதிபதிகளும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று கொரிய எல்லையில் வடகொரியா வீரர்கள் குண்டுமழை பொழிந்தனர். துப்பாக்கியாலும், சிறிய வகை பீரங்கியாலும் தாக்கியதாக கூறப்படுகின்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத வடகொரியா, பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது.

Previous Post Next Post