கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? -உரிய நேரத்தில் வருவார் என்கிறார் சம்மந்தன்- - Yarl Thinakkural

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? -உரிய நேரத்தில் வருவார் என்கிறார் சம்மந்தன்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் உரிய நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார். 

வானொலி ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காலில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

எனக்கு பின்னராக தமிழ் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்தும் தலைவரை தெரிவு செய்வது மக்களுடையதும், அங்கத்துவ கட்சிகளியுடை அதிகாரங்களாகும். அவர்கள் உரிய நேரத்தில் உரிய முடிவினை எடுப்பார்கள். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக நான் வருவேன் என்று கனவுகூட நான் காணவில்லை. இதே போன்று வரவேண்டிய நேரத்தில் தலைவராக வர வேண்டியவர்கள் வருவார்கள். 

அது தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தந்தை செல்வாவின் காலம் தொடக்கம் இன்றுவரை ஒவ்வொரு தலைவர்கள் வருகின்றார்கள். அது போன்று எனக்கு பின்னரான காலத்திலும் தலைமை தாங்க ஒருவர் வருவார். அது நிச்சையமாக நடக்கும். 

தூய்மையாக செயற்படுகின்ற போது எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. உரிய நேரத்தில் உரிய விடயம் நடைபெறும். 
Previous Post Next Post