ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் ஞாயிறு!! -நாளை பாராளுமன்றில் அஞ்சலி- - Yarl Thinakkural

ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் ஞாயிறு!! -நாளை பாராளுமன்றில் அஞ்சலி-


உயிரிழந்த ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை கொட்டகலையில் நடைபெறவுள்ளது. 

அரசாங்கத்தின் பூரண மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் நடைபெறும் எனவும் அரசாங்க வட்டாரங்கள் இன்று காலை தெரிவித்தன.

நேற்றிரவு பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது உடல் குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. 

இன்று காலை 11 மணிக்கு ஜயரத்ன மலர்ச்சாலையில் இருந்து அவரது பூதவுடல் கொழும்பு இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. 

நாளை பாராளுமன்றத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படும் அவரது பூதவுடல் வெள்ளிக்கிழமை கொட்டகலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அங்கு மக்களின் அஞ்சலி நிகழ்வுகள் நிறைவு பெற்றபின்னர் கொட்டகலையில் ஞாயிறு இறுதிக்கிரியை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Previous Post Next Post