பொலிஸாரை கண்டதும் பண்ணை கடலுக்குள் பாய்ந்த சிறுவன்!! -நீந்தி பிடித்த கடற்படை: போதை மாத்திரை கடத்தியவராம்- - Yarl Thinakkural

பொலிஸாரை கண்டதும் பண்ணை கடலுக்குள் பாய்ந்த சிறுவன்!! -நீந்தி பிடித்த கடற்படை: போதை மாத்திரை கடத்தியவராம்-

யாழ்ப்பாணம் தீவகத்திற்கு செல்லும் வழியில் போதை மாத்திரைகளுடன் சென்ற சிறுவனை கைது செய்ய முற்பட்ட போது அவர் பண்ணைக் கடலுக்குள் பாய்ந்த தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இருப்பினும் கடலுக்குள் பாய்ந்த கடற்படையினர் நீந்திச் சென்று குறித்த சிறுவனை கைது செய்த சம்பவம் ஒன்று சற்று முன்னர் நடந்துள்ளது.

வேலணை சாட்டி கடற்கரை பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் 18 வயதுச் சிறுவனே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சிறுவன், வேலணைப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்குவதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அத் தகவலை அடுத்து குறித்த சிறுவனை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டனர்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் இருந்து போதை மாத்திரைகளை கொண்டுவந்த சிறுவனை பண்ணைப் பகுதியில் வைத்து பொலிஸார் வழிமறித்துள்ளனர்.

இதன் போது குறித்த சிறுவன் பொலிஸாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கடலுக்குள் பாயந்து நீந்தி தப்பிச் சென்றுள்ளார்.

இருப்பினும் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் நின்று கடற்படையினர் சுதாகரித்துக் கொண்டு, தாமும் கடலுக்குள் பாய்ந்த சிறுவனை விரட்டிப்பிடித்துள்ளனர்.

கடற்படையால் பிடிக்கப்பட்ட சிறுவன் கரைக்கு கொண்டுவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சிறுவன் தனக்கு போதை மாத்திரைகளை வழங்குவரை பொலிஸாரிடம் கூறியுள்ளார். இதன்படி சிறுவனுக்கு போதை மாத்திரைகள் வழங்கியவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Previous Post Next Post