யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று காலை உரும்பிராய் பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வீட்டில் வைத்து அரச மதுபான போத்தல்களை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
180 மில்லி லிட்டர் கொள்ளளவு உடைய 8 அரச சாராயப் போத்தல்களை விற்பனை செய்தபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவில் உடையில் சென்ற போலீசாருக்கு 500க்கு விற்பனை செய்ய முற்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment