கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலிருந்து கடற்படை விலகவில்லை!! -கடற்படை பேச்சாளர்- - Yarl Thinakkural

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலிருந்து கடற்படை விலகவில்லை!! -கடற்படை பேச்சாளர்-

நாட்டில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபடும் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பெருமளவு கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் தற்காலிகமாக கடற்படை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கையிலிருந்து விலகியிருக்கதீர்மானித்துள்ளது என தகவல்கள் வெளியாகியிருந்தது.

இருப்பினும் அந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், பல கடற்படையினர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் கடற்படை முழுமையாக நாட்டில் முன்னெடுக்கப்படும் கொரோனா தடுப்பு பணிகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து சிஐடியினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொய்யான செய்தியை வெளியிடும் ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post