யாழில் ஒரு கொரோனா நோயாளி!! -சற்று முன் அடையாளம் காணப்பட்டார்- - Yarl Thinakkural

யாழில் ஒரு கொரோனா நோயாளி!! -சற்று முன் அடையாளம் காணப்பட்டார்-

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கொழும்பு கொரோனா அபாய வலையத்தில் இருந்த ஒரு தொகுதியினர் யாழ்ப்பாணம் பலாலியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.

அவர்களின் 45 பேருடைய மாதிரிகள் இன்று சேகரிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையின் ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த பரிசோதனை முடிவுகள் சற்று முன்னர் கிடைத்திருந்தன. இந்நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவருடைய மாதிரியில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வசித்த குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தார்.

Previous Post Next Post