கட்டுப்படுத்தப்பட்ட தீ பரவல்!! -சேதங்கள் இல்லை: விசமிகளாலேயே தீ வைப்பு- - Yarl Thinakkural

கட்டுப்படுத்தப்பட்ட தீ பரவல்!! -சேதங்கள் இல்லை: விசமிகளாலேயே தீ வைப்பு-


சற்று முன் அல்லப்பிட்டிப் பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவு மற்றும் அப்பகுதி பொது மக்கள் இணைந்து மிக வேகமாக பரவிய தீயினை அணைத்துள்ளனர்.

அல்லப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி நீண்ட காலமாக துப்பரவு செய்யப்படாமல் பற்றைக்காடாக இருந்தது.

குறித்த காணிக்குள் மிக நெருக்கமாக இருந்த பற்றையை விசமிகள் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் தீ வைத்துள்ளனர்.

பற்றைகளில் பிடித்த தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதை அடுத்து அப்பகுதி மக்கள் அதை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் மக்களுடன் இணைந்து அங்கு பரவிய தீயிணை கட்டுப்பாட்டுள்குள் கொண்டுவந்தனர்.

குறித்த தீப்பரவலால் பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post