மயிலிட்டியில் மோட்டார் குண்டுகள்!! -சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர்- - Yarl Thinakkural

மயிலிட்டியில் மோட்டார் குண்டுகள்!! -சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர்-

யாழ்ப்பாணம் மயிலிட்டி தென்மயிலை பகுதியில் கிணற்றில் இருந்து மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற கிராமமான மேற்படி கிராமத்தில் இன்று சனிக்கிழமை மாலை கிணற்றை இறைத்து சுத்தம் செய்யும் போதே 20 மேற்பட்ட மோட்டார் குண்டுகள் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அப்பகுதி கிராம சேவகர் ஊடாக பலாலி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடிப் படையினர் அக் குண்டுகளை மீட்டுச் சென்றுள்ளனர்.

Previous Post Next Post