மிருசுவிலில் வாளால் வெட்டி மோதிக் கொண்ட உறவினர்கள்!! -ஒருவர் சாவு: பலர் படுகாயம்- - Yarl Thinakkural

மிருசுவிலில் வாளால் வெட்டி மோதிக் கொண்ட உறவினர்கள்!! -ஒருவர் சாவு: பலர் படுகாயம்-

யாழ்.மிருசுவில் பகுதியில் உறவினர்கள் தமக்கிடையில் வாள்களால் வெட்டி மோதிக் கொண்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படிப் பகுதியைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது 40) என்ற நபரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த சம்பவத்தில் மேலும் பலர் காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இரவு 7.40 மணியளவில் இச் சம்பவம் நடந்துள்ளது. இச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்துள்ளது என்றும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் கொடிகாகம் பொலிஸார் தகவல் தெரிவிhத்தனர்.

Previous Post Next Post