உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் செய்தொழில் பிரிவின் தலைவராக இலங்கை பெண்ணான ராஜி பாற்றாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அமைப்பின் ஊடாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பெண்களுக்கு சுய தொழிலுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இப்பயிற்சி பெற்று தொழில் செய்பவர்களுக்கான சந்தை படுத்தல் வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் தலைவராக கனடாவில் வசிக்கும் ராஜி பாற்றாசனும், உதவி துணை தலைவர்களாக 7 பேரும், 14 செயற்ப்பாட்டாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.