தாலிக்கொடி அறுப்பு!! -ஆட்டோ இலக்கத்தை வைத்து மடக்கிப்பிடித்த பொலிஸ்- - Yarl Thinakkural

தாலிக்கொடி அறுப்பு!! -ஆட்டோ இலக்கத்தை வைத்து மடக்கிப்பிடித்த பொலிஸ்-

நவாலி சின்னப்பா வீதியில் சென்ற இளம் குடும்பப் பெண்ணிடம் 11 பவுண் தாலிக் தாலியை நேற்று சனிக்கிழமை மாலை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் இலக்கத்தைவைத்து கொள்ளையர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 11 தங்கப் பவுண் தாலிக்கொடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.இதன்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Previous Post Next Post