முகமாலையில் மீட்கப்பட்டு பெண் போராளிகளின் எச்சங்கள்!! - Yarl Thinakkural

முகமாலையில் மீட்கப்பட்டு பெண் போராளிகளின் எச்சங்கள்!!

முகமாலை முன்னரங்கப் பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதி, இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் வு.சரவணானந்த ராஜா முன்னிலையில் தோண்டப்பட்டது. 

குறித்த பகுதியில் தோண்டப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளது சீருடை மற்றும் பெண்களுக்கான ஆடைகள் அங்கிருந்து மீட்கப்பட்டதால் அவை பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. 

அங்கு இரண்டு பெண் போராளிகளுடைய சீருடைகள் மற்றும் ஆடைகள் மீட்கப்பட்டதுடன், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. 


Previous Post Next Post