பேருந்து சேவை மீள ஆரம்பம்!! -பிரதான வீதிகளில் பயணிக்கும்- - Yarl Thinakkural

பேருந்து சேவை மீள ஆரம்பம்!! -பிரதான வீதிகளில் பயணிக்கும்-

எதிர்வரும் 11 ஆம் திகதி நாடு வழமைக்கு திரும்பும் என்ற அறிவிப்பினை அடுத்து அரச மற்றும் தனியார் பிரிவுகளின் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அரச மற்றும் தனியார் துணை ஊழியர்கள் கடமைகளுக்கு சமூகமளிப்பதற்காக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு பிரதி பொதுமுகாமையாளர் ஏ.எச்.பண்டுக இதனை தெரிவித்துள்ளார்.

அந்தந்த நிறுவனங்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய பிரதான வீதிகள் சிலவற்றில் பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post