மக்கள் மீது சுமத்தப்படும் வரிகள்!! -சஜித் குற்றச்சாட்டு- - Yarl Thinakkural

மக்கள் மீது சுமத்தப்படும் வரிகள்!! -சஜித் குற்றச்சாட்டு-

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழநிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்கள் மீதான வரியை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை மிகவும் கடுமையான நடவடிக்கை என அவர் வர்ணித்துள்ளார்.

தாங்கள் பாதுகாக்கப்படுவார்கள் சிறந்த வாழ்க்கை தரம் உறுதிசெய்யப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே மக்கள் அரசாங்கத்தை தெரிவு செய்கின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது வரிகளை சுமத்துகின்றது,பொருட்களின் விலைகளை அதிகரிக்கின்றது வாழ்க்கை செலவு விண்ணை எட்டும் நிலையை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மற்றும் முடக்கல் காரணமாக தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளால் மக்கள் ஏற்கனவே அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவ்வாறான தருணத்தில் அரசாங்கம் மக்களிற்கு சலுகைகளை வழங்கவேண்டும் எனினும் 6.9மில்லியன் மக்களின் வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதற்கு எதிர்மாறான விதத்தில் செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது சுமைகளை சுமத்துவதற்கு எதிராக வீதிகளில் ஜனநாய மோதல்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ள சஜித்பிரேமதாச ஐக்கியமக்கள் சக்தி மக்களிற்கு ஆதரவாக நிற்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post