மன்மோகன் சிங் வைத்தி சாலையில்!! - Yarl Thinakkural

மன்மோகன் சிங் வைத்தி சாலையில்!!

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே அவசர அவசரமாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 8.45 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

87 வயதான மன்மோகன் சிங் ஏற்கனவே இருமுறை இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

1990ஆம் ஆண்டும் மற்றும் கடந்த 2009ஆம் ஆண்டுமே அவர் இவ்வாறு இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post