யாழில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பஸ் சேவை!! -இன்று ஆரம்பிக்கப்பட்டது- - Yarl Thinakkural

யாழில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பஸ் சேவை!! -இன்று ஆரம்பிக்கப்பட்டது-


யாழ்ப்பாணத்தில் இருந்துகொழும்பு, கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை இன்று தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் கொரானா நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைபட்டு வந்த நிலையில் இன்றைய தினம் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் தளர்த்ப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையினர் பஸ் சேவைகள் நீர்கொழும்பு, அக்கரைப்பற்று, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு பஸ் சேவையை ஆரம்பித்துள்ளனர்.

அத்தோடு இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகளும் வழமைபோல்  ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது, எனினும் வெளி மாவட்டங்களுக்கான  தனியார் பஸ்சேவைகள் ஆரம்பிக்கப்படவில்லை அதாவது வடக்கு மாகாணத்துக்குட்பட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே தனியார் போக்குவரத்து சேவை இன்று இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பான மத்திய நிலையம் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ். தனராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.....

இன்று அதிகாலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்புக்கான சேவை நீர்கொழும்பு வரைக்கும் இடம்பெறவுள்ளது.

எனினும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சேவையானது ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பஸ் சேவை இடம்பெறவுள்ளது.

காலப்போக்கில் அதிகரிப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் எனினும் பஸ் சேவையினை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தோடு உள்ளூர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து பஸ் சேவையும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் முகமாக உள்ளூர் சேவைகள் அதிகரிக்கப்பட வுள்ளதாகவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post