அச்சுவேலியில் மரக்காலைக்கு தீ வைத்த விசமிகள்!! - Yarl Thinakkural

அச்சுவேலியில் மரக்காலைக்கு தீ வைத்த விசமிகள்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் மரம் அரியும் நிலையத்துக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் நடந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிலில் வந்த 4 பேர் கொண்ட குழுவினராலேயே மேற்படிச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளர் இனால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post