உயிருடன் வடகொரிய ஜனாதிபதி புரளிகளுக்கு முற்றுப்புள்ளி - Yarl Thinakkural

உயிருடன் வடகொரிய ஜனாதிபதி புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உடல்நிலை குறித்து பல விதமான வதந்திகளும், ஊக செய்திகளும் வெளியான நிலையில், நேற்று முதன்முறையாக பொதுநிகழ்வில் கலந்து கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் கடந்த 20நாட்களாக வெளியுலகிற்கு தனது முகம் காட்டாமல் இருந்து வந்தார். வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் கூட கிம் பங்கேற்கவில்லை.
இந்த சூழலில் சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் சனல் செய்தி வெளியிட்டது.


இந்நிலையில் கடந்த 20 நாட்களாக நீடித்து வந்த மர்மம் அனைத்தையும் உடைத்து நேற்று பொது நிகழ்வில் ஜனாதிபதி  கிம் பங்கேற்றார்.
தலைநகர் யாங்யாங் அருகே சன்சியான் நகரில் அரசு சார்பில் கட்டப்பட்ட உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை றிபன் வெட்டி கிம் நேற்று தொடங்கி வைத்தார்.


உழைப்பாளர் தினமான நேற்று சன்சியானில் உள்ள பாஸ்பேட் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. இதற்கான புகைப்படங்களை வடகொரிய அரசின் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ.) வெளியிட்டுள்ளது.

Previous Post Next Post