தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தே கொரோனா தொற்றுகிறது!! -விசாரணைக்கு குழு அமைப்பு- - Yarl Thinakkural

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தே கொரோனா தொற்றுகிறது!! -விசாரணைக்கு குழு அமைப்பு-

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு கடற்படையினர் அதிகளவில் பாதிக்கப்படுவதால் அதனை தடுப்பதற்காக சில கண்டிப்பான வழிகாட்டுதல்களை நடமுறைப்படுத்த உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

நான்கு நிபுணர்களை கொண்ட குழுவொன்று வெலிசர முகாமில் கொரோனா வைரஸ் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விசாரணைகளின் பின்னர் கடற்படையினர் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களை தான் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெலிசர முகாமை சேர்ந்த கடற்படையினர் சிலர் தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அனுப்ப்பபட்டுள்ளமை தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு உள்ளவர்களிற்கு கடற்படையினர் வைரசினை பரப்பினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் வெலிசர முகாமில் உள்ள கடற்படையினருக்கு மாத்திரமின்றி வெளியே பணியில் ஈடுபட்டிருக்கும் வெலிசர முகாமை சேர்ந்தவர்களிற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை கடற்படையினர் பின்பற்றுவதை கடற்படையினர் மருத்துவ பிரிவினர் உறுதி செய்யவேண்டும் என அனில் ஜசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous Post Next Post