இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் யாழ்.போதனா வைத்திய சாலையில்!! - Yarl Thinakkural

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் யாழ்.போதனா வைத்திய சாலையில்!!

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வரணி பகுதியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது 23) என்ற இளைஞர் வல்லைவெளியில் உள்ள இராணுவ காவலரனில் நின்ற இராணுவத்தினலால் சுடப்பட்டார்.

படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்ட குறித்த இளைஞர் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Previous Post Next Post