கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு கொரோனா அச்சம் இல்லை!! -அனில் ஜசிங்க- - Yarl Thinakkural

கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு கொரோனா அச்சம் இல்லை!! -அனில் ஜசிங்க-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான தாதியால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எந்த வித ஆபத்துமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தாதியும், மருத்துவமனையும் உரிய வழிமுறைகளை பின்பற்றியதன் காரணமாக வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள தாதி குறைந்தளவு எண்ணிக்கையானவர்களுடேனேயே தொடர்பிலிருந்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

இது நல்ல செய்தி என தெரிவித்துள்ள அனில்ஜசிங்க கொழும்பு தேசிய வைத்தியாசாலையின் தாதியொருவர் நோயினால் பாதிக்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட தாதியுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியாசாலையின் கட்டணம் செலுத்தும் வோட்டில் பணியாற்றும் தாதியொருவரே வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Previous Post Next Post