மக்கள் மத்தியில் கொரோனா முழுதாக நீங்காது!! -உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை- - Yarl Thinakkural

மக்கள் மத்தியில் கொரோனா முழுதாக நீங்காது!! -உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை-

எயிட்ஸ் நோயை போன்று கொரோனா வைரஸ் சில சந்தர்ப்பங்களில் மக்கள் மத்தியில் இருந்து முற்றாக இல்லாமல் போகாது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, வைரஸ் முற்றாக இல்லாமல்போகும் என்பதை கணிப்பதற்கு எதிராக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரநிலை இயக்குநரான மருத்துவர் மைக் ரயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ{க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு பாரிய முயற்சி அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எச்.ஐ.வி உலகிலிருந்து நீங்கிவிடவில்லை. எனினும், வைரஸ் தொடர்பில் தாங்கள் புரிந்துகொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரநிலை இயக்குநரான மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post