இளம் யுவதி கடத்தல்: தடுத்தவர்கள் மீது தாக்குதல்!! -கொடிகாமத்தில் சி.ஜ.டி என கூறி வந்த கும்பல் கைவரிசை- - Yarl Thinakkural

இளம் யுவதி கடத்தல்: தடுத்தவர்கள் மீது தாக்குதல்!! -கொடிகாமத்தில் சி.ஜ.டி என கூறி வந்த கும்பல் கைவரிசை-

யாழ் கொடிகாமம் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வீடு புகுந்து தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரால் அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு 20 வயது யுவதினை கடத்திச் செல்லப்பட்டுள்ளார். 

இன்று அதிகாலையில் நடந்த குறித்த கடத்தலை வாள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட குழுவே மேற்கொண்டுள்ளனர். 

குறித்த கடத்தல் கும்பலினைச் சேர்ந்த ஒருவர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் ஒன்றுவிட்ட சகோதரன் என்பதால் குறித்த கடத்தல் சம்பவத்தை பெரிதாக்காமல், சமரசம் செய்து மூடி மறைக்கும் செயற்பாடுகள் பொலிஸ் தரப்பார் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இன்று அதிகாலை வேளை கொடிகாமத்தில் உள்ள வீடொன்றிற்குள் 7 பேர் கொண்ட குழுவினர் புகுந்துள்ளனர். 

வீட்டிற்குள் புகுந்த அவர்கள் தங்களை பொலிஸ் புலணாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், தமது கைகளில் இருந்த கத்தி, வாள் போன்றவற்றால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர். 

இதன் பின்னர் அந்த வீட்டில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் யுவதியை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர். 

இருப்பினும் குறித்த யுவதி கடத்தப்பட்டு ஒரு மணித்தியாவலங்களுக்கு பின்னர் அருகில் உள்ள கோவிலில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். 
Previous Post Next Post