யாழ் மயிலிட்டி வாசி கொரோனாவால் மரணம்!! - Yarl Thinakkural

யாழ் மயிலிட்டி வாசி கொரோனாவால் மரணம்!!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பெல்ஜியம் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த சுப்பையா பிரதீப் (வயது 40) என்னும் இளம் குடும்பஸ்தரே நேற்று உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

65 நாட்களாக கொரோனாவின் பிடியில் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் இருந்துள்ள நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் அயராது சேவையாற்றியவர் என பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

Previous Post Next Post