மனிதாபிமானமற்ற வெளிநாடுகளே நாட்டில் கொரோனா அதிகரிக்க காரணம்!! -அனில் ஜசிங்க ஆவேசம்- - Yarl Thinakkural

மனிதாபிமானமற்ற வெளிநாடுகளே நாட்டில் கொரோனா அதிகரிக்க காரணம்!! -அனில் ஜசிங்க ஆவேசம்-

வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் அங்கு மனிதாபிமானத்துடன் நடத்தப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். 

இலங்கைளில் வெளிநாட்டவர்களை பராபரித்தது போன்று வெளிநாடுகளிலும் இலங்கையர்களை உரிய முறையில் பராமரித்திருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்தவர்கள் பணிபுரியும் நாடுகள் மனிதாபிமானத்துடன் சிந்தித்திருந்தால் நாங்கள் வெளிநாட்டு நோயாளிகளை நடத்தியது போன்று அவர்களும் செயற்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பிரகடனங்களின் படி நோயாளி ஒருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான உரிமை உலகின் எந்த நாட்டிற்கும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அவர்கள் நோயாளிகளாகயிருந்தாலும் கூட இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் சிறிதும் தயங்காது என தெரிவித்துள்ள அனில்ஜசிங்க ஆனால் இதற்கு சிறிது காலம் எடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் வருவதன் காரணமாக இலங்கையர்களை அழைத்து வரும் விமானங்களிற்குள் இடையில் நாங்கள் இடைவெளியை பேணவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசிற்கு எதிரான எங்கள் போராட்டம் கடும் அழுத்தங்களிற்கு மத்தியிலேயே இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மத்தியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே நாங்கள் எதிர்கொண்டுள்ள ஆபத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post