யாழின் முதலாவது கொரோனா நோயாளி விரைவில் வீடு திரும்புவார்!! -சத்தியமூர்த்தி- - Yarl Thinakkural

யாழின் முதலாவது கொரோனா நோயாளி விரைவில் வீடு திரும்புவார்!! -சத்தியமூர்த்தி-

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியும் மிக விரைவில் வீடு திரும்புவார் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 17 பேர் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்களின் 16 பேர் முழுமையாக குணமடைந்து தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும் சுவிஸ் மத போதகருடன் நேரடி தொடர்பில் இருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட் கொரோனா நோயாளியான தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர் தொடர்ந்து ஜ.டி.எச் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருடைய உடல் நலமும் தற்போது தேறி வருகின்றது. இந்நிலையில் மிக விரைவில் முழுமையாக குணமடைந்து அவர் தனது வீட்டிற்கு வருவார் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post