பளையில் விமானப் படையின் அம்புலன் மோதி கோர விபத்து!! -குடும்பஸ்தர ஸ்தலத்தில் பலி: மனைவி படுகாயம்- - Yarl Thinakkural

பளையில் விமானப் படையின் அம்புலன் மோதி கோர விபத்து!! -குடும்பஸ்தர ஸ்தலத்தில் பலி: மனைவி படுகாயம்-

பளைப் பகுதியில் இன்று காலை விமானப்படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

பளை – தம்பகாமம் சந்தி ஏ-9 வீதிக்கு குறித்த குடும்பஸ்தரும் குடும்பத் அவருடைய மனைவியும் வந்து ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

Previous Post Next Post