யாழில் ஒரு கொரோனா நோயாளி அடையாளம்!! -ஆய்வுகூட பரிசோதனையில் உறுதி- - Yarl Thinakkural

யாழில் ஒரு கொரோனா நோயாளி அடையாளம்!! -ஆய்வுகூட பரிசோதனையில் உறுதி-

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் முல்லைதீவு தனிமைப்படுத்த நிலையத்தை சேர்ந்த ஒருவருக்கு  கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வு கூடத்தில் இன்று 39 பேருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - ஒருவர் .

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.

பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்.

கடற்படை வைத்தியசாலை காங்கேசன்துறை -29 பேர்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாம்- ஒருவர்  உள்ளிட்ட 39 பேருக்கான பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா திற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
Previous Post Next Post