யாழில் குருதி தட்டுப்பாடு!! -தானம் செய்யுமாறு சத்தியமூர்த்தி அவசர கோரிக்கை- - Yarl Thinakkural

யாழில் குருதி தட்டுப்பாடு!! -தானம் செய்யுமாறு சத்தியமூர்த்தி அவசர கோரிக்கை-

யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

இதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

கடந்த சில வாரங்களாக இரத்த வங்கிக்கு தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை. 

இது தவிரவும் வழமையாக நடைபெறுகின்ற  இரத்ததான முகாம்கள் தற்போதைய சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை.
ஆகவே குருதிக் கொடையாளர்கள்  வைத்தியசாலை இரத்த வங்கியை தொடர்பு கொண்டு குருதிக்கொடை செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன். எல்லா வகையான( Blood groups) குருதிகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

0212223063, 0772105375 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு குருதிகளை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
Previous Post Next Post