நாளை அரச, தனியார் துறை மீண்டும் இயங்கும்!! -மக்கள் நடமாட கட்டுப்பாடு: இராணுவத் தளபதி- - Yarl Thinakkural

நாளை அரச, தனியார் துறை மீண்டும் இயங்கும்!! -மக்கள் நடமாட கட்டுப்பாடு: இராணுவத் தளபதி-

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை முதல் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கட்டுப்பாடுடன் இயங்கும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்iகியல்:-

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அடையாள அட்டையை பயன்படுத்தும் விதம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பயணிக்கவும், அதிகளவில் பொதுமக்கள் வீதிகளில் ஒன்றுகூட அனுமதிக்க போவதில்லை என அவர் தெரிவித்தார்.

அரச தனியார் நிறுவனங்கள் பணியாளர்கள் பயணிப்பதற்காக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்பட்டுள்து தனிப்பட்ட பயணங்களுக்கு அதன பயன்படுத்த முடியாது என இராணுவதளபதி தெரிவித்தார் .

அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்துகொள்ளமுடியும். அத்துடன் தொற்று பரவாதமுறையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவதளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
Previous Post Next Post