ரஸ்ய பிரதமருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

ரஸ்ய பிரதமருக்கு கொரோனா!!

உலக நாடுகளின் பட்டியலில் ரஸ்ய மீது ஆதீக்கம் செலுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று அந்நாட்டில் தீவிரமடைந்து அந்நாட்டில் பிரதமரையும் தாக்கியுள்ளது.

ரஸ்யாவில் ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ரஸ்யாவின் பிரதமர் மிக்கைல் மிசிஸ்டினுக்கும் கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 54 வயது நிரம்பிய மிக்கைல் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி தான் ரஸ்யாவின் பிரதமராக பதவியேற்றார்.

வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து மிக்கைல் தன்னைத்தானே தனிமைபடுத்தி கொண்டார்.

வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தி கொண்டாலும் அரசின் கொள்கைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கும் சமயங்களில் வீடியோ கான்பிரஸ் மூலம் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

Previous Post Next Post