வுகான் ஆய்வுகூடத்தில் கொரோனா உருவாக்கம்!! -ஆதாரங்கள் உண்டு என்கிறார் டிரம்ப்- - Yarl Thinakkural

வுகான் ஆய்வுகூடத்தில் கொரோனா உருவாக்கம்!! -ஆதாரங்கள் உண்டு என்கிறார் டிரம்ப்-

உலக மக்களுக்கு உயிர் அச்சுறுத்தலை விடுத்துள்ள கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வுகூடத்தில்தான் உருவாக்கப்பட்டது என்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிலடத்தில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 10 இலட்சத்து 94 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் உள்ள ஹ_பேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், அமெரிக்காவை குறிவைத்தே கொரோனா வைரஸ் வுகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்திதார்.

அப்போது, வுகான் நகரில் உள்ள வைராலஜி நிறுவனத்தில் இருந்துதான் கொரோனா பரவி இருக்கிறது என்பதற்கான ஆதாரம் உள்ளதா? என்று  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், ‘ ஆம்,  கொரோனா வுகான் ஆய்வுக்கூடத்தில்  உருவாக்கப்பட்டுள்ளதற்கான போதிய ஆதாரம் உள்ளது’ என தெரிவித்தார்.

இதையடுத்து, எப்படி இவ்வாறு உறுதியாக கூறுகிறீர்கள் என செய்தியாளர்கள் மீண்டும் பதில் கேள்வி எழுப்பினர். அதற்கு உடனடியாக, 'அந்த விவரத்தை உங்களிடம் தற்போது கூற முடியாது’ என மறுத்துவிட்டார்.

மேலும், இந்த விவகாரத்தில் சீனா மீது கடுமையான பொருளாதாரத்தடைகளை விதிக்க உள்ளதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post