யாழ் வாசிகள் 8 பேரின் உடல் நலம் தேறிவருகிறது!! -விரைவில் வீடுகளுக்கு வருவார்கள்: சத்தியமூர்த்தி- - Yarl Thinakkural

யாழ் வாசிகள் 8 பேரின் உடல் நலம் தேறிவருகிறது!! -விரைவில் வீடுகளுக்கு வருவார்கள்: சத்தியமூர்த்தி-

கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கொரோனா சிறப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 9 பேருடைய உடல் நலம் தேறிவருவதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மிக விரைவில் அவர்கள் தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதனா வைத்திய சாலையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுவரையில் இப்பகுதியில் இருந்து அண்மைக்காலங்களில் 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் சிகிச்சைக்காக நாட்டில் உள்ள 4 சிறப்பு வைத்திய சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களின் 9 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து முழுமையாக குணமடநை;த நிலையில் மீண்டும் இங்கு கொண்டுவரப்பட்டு தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தொடர்ந்து 8 பேரின் உடல் நிலைகளும் தேறிவருகின்றது. அவர்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து முழுமையான குணமடைந்து மிக விரைவில் தத்தமது வீடுகளுக்கு வருவார்கள் என்றார்.
Previous Post Next Post