கொரோனா தொற்றா என சந்தேகம்!! -யாழில் 9 பேருக்கு பரிசோதனை- - Yarl Thinakkural

கொரோனா தொற்றா என சந்தேகம்!! -யாழில் 9 பேருக்கு பரிசோதனை-

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 9 பேருடைய மாதிரிகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்று வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 2 பேர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

வைத்திய சாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 6 பேருடைய மாதிரிகளும் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன.

மேலும் வவுனியா பொது வைத்திய சாலையில் இருந்தும் ஒருவருடைய மாதிரி இங்கு அனுப்பிவைக்கப்பட்டன.

குறித்த 9 பேருடைய மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனை முடிவில் அதில் எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


Previous Post Next Post